தமிழ்நாட்டில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழக தொழில் துறை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில், வர்த்தகத் துறை இயக்குநராக நிர்மல்ராஜூம், புவியியல், சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னியும், உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக ஹர் சஹாய் மீனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.