
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.