
காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை பரப்பி வருகிறார்கள் .தற்போது நடந்ததை போல சித்தரித்து வதந்தி பரப்பி மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மக்களிடையே வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் பழைய வீடியோக்கள், போஸ்டர்களை சிலர் பரப்புகின்றனர். இத்தகைய செயல் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கும். எனவே, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.