மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உள்ளவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய திட்டங்களுக்கான நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்களது நாமினியை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய நாமினி தேர்வு செய்வது மற்றும் நாமினியை பெயர் நீக்க விரும்பினாலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் நாமினியை தேர்வு செய்யாத முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக அதற்கான செய்தி அனுப்பப்படும் என்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான நாமினியை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.