
செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலை கோயமுத்தூரில் வந்து பேசுகின்ற போது, அவர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசியிருப்பது என்னவென்றால் ? கோயமுத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினராக கம்யூனிஸ்ட் பி.ஆர் நடராஜன் இருக்கிறார். அவர் எப்படி இங்கு வந்து எம்பி இருக்கலாம். ஒரு வளர்ச்சிக்கு மையமாக இருக்கிற நகரத்தில் எப்படி அவர் MPயாக இருக்கலாம்.
அதனால கோயம்புத்தூர் நகர் வளர்ச்சி இல்லாத நகரமாக மாறிப்போச்சு. அவர் இந்த மக்களுக்கு எந்தவிதமான தொண்டையும், எந்தவிதமான பணியும் செய்யல. கோயம்புத்தூரில் தொழில் முடங்கி, வளர்ச்சியெல்லாம் மங்கி போய் இருப்பதற்கு அவர் தான் காரணம் என சொல்லி இருக்கிறார். நான் அண்ணாமலைக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் தோழர் பி.ஆர் நடராஜன் மக்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பி.ஆர் நடராஜன்.
அவர் ஒன்னும் புதுசா தேர்தல நிக்கல. ஒரு தேர்தல்ல நின்னு, ஒரு முறை கூட வெற்றி பெறுவதற்கு தகுதி இல்லாத அண்ணாமலை, ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்ற பி.ஆர் நடராஜன், இன்றைக்கு மீண்டும் வெற்றி பெற்றிருக்கிற அவரைப் பார்த்து, வளர்ச்சிக்கு பாதகமானவர்… எப்படி எம்பியா இருக்காரு? மக்கள் ஓட்டு போட்டு தான் எம்பியாக இருக்கிறார். எப்படி MPயா இருக்காருன்னா…. எனக்கு ஒன்னும் புரியலையே… மக்கள் ஓட்டு போட்டு தான் எம்பியா இருக்க முடியும். அவர் ஒன்னும் ராஜசபா எம்பி இல்லையே… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்தார்.