அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   மக்கள் தான் எஜமானர்கள்.. தமிழ்நாட்டு மக்கள்தான் நாடாளுமன்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்கின்றார்கள். அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களுடைய லட்சியம்.  சில நேரத்திலே நாம் கூட்டணியை சேர்ந்து போட்டியிடுகின்றோம். அவர்கள் தேசிய கட்சியாக இருக்கின்றார்கள். அவர்கள் தேசிய அளவில் ஒரு முடிவு எடுத்து நமக்கு உடன்படாத சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். இனி அந்த நிலை இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு மக்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாடு மக்கள்தான் நமக்கு முதலாளிகள். அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் நம்முடைய தலையாய கடமை.

தமிழ்நாட்டு மக்களுடைய உரிமையை காக்கவும்,  தமிழ்நாட்டு வளர்ச்சி பெறவும்,  தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறவும்,  தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெறுவதும்  எங்களுடைய பிரதான நோக்கம் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். ஆகவே  தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தான் எங்களை வெற்றி பெறச் செய்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ,  அதை நாடாளுமன்றத்திலே நாங்கள் பிரதிபலிப்போம்.  அதுதான் எங்களுடைய கொள்கை என தெரிவித்தார்.