
செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, 57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயசுக்கு கீழ இருக்கான். இதெல்லாம் கனெக்ட் பண்ணனும். அரசியல் கட்சிகள் கனெக்ட் பண்ணனும். தலைவர்கள் கனெக்ட் பண்ணும். இவங்களுடைய லாங்குவேஜ் வேற. இவங்க பேசுறது வேற. அவங்க எல்லாம் நேச்சர் ரிபில். நேச்சர் அக்கிரசிவ். 57% தமிழக வாக்காளர்கள் 36 வயசுல இருக்காங்க. அவங்க எல்லாம் சத்தியமா டிவியை பார்க்கிறது இல்லை.
அவங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் வாழ்றாங்க. இந்த டிவில இவ்வளவு காட்டுக்கு கத்து கத்தி பார்க்கிறது 4% . உங்க டிபேட் பார்ப்பது 2 1/2%.. தனியா இருக்கிற 50% அவன் டிவி கிடையாது, டிபேட் கிடையாது, நீங்க போடுறத பாக்குறது இல்ல. இன்ஸ்டாகிராமில்… சோசியல் மீடியால அந்த 55 % மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவங்க பல்ஸை நீங்க கருத்துக்கணிப்பு வச்சா ? டிவில எல்லாம் தெரியாது. அது ஒரு தனி உலகம். தனி குரூப். அந்த உலகத்துக்குள்ள சுத்துறதுதான் இங்க அரசியல்.
அதை தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறைய அரசியல் கட்சிகள் இன்னும் புரிஞ்சுக்கல. அதனால நாம டிவில வருது. நைட்டு டிபேட் நடக்குது. நாலு பேர் வந்து கருத்து சொல்றாங்க. அதெல்லாம் அரசியல் தாண்டியாச்சு. அதெல்லாம் 1990 , 1995 ஸ்டைல். உண்மையிலே சொல்ல போனோம் பேப்பர் யார் படிக்கிறான் ? படிக்கணும்னு நான் வற்புறுத்துறேன்.
என்னுடைய பாயிண்ட் டிவி பாக்கணும்னு சொல்றேன். உங்களுடைய டிபேட் எல்லாம் பாக்கணும்னு சொல்றேன். ஏன்னா உங்க கிட்ட எடிட்டர் இருக்காங்க, கருத்தை போடுறீங்க. என்ன சொல்றேன்னா… யாரையும் பத்தி தவறா சொல்லவில்லை. நான் தினமும் டிவி பாக்குறேன், தினமும் பேப்பர் படிக்கிறேன், டிவி மூலமாக அறிவை வளர்த்துக்கிறேன், பேப்பர் மூலமா அறிவை வளத்துக்கிறேன் அது வேற.
ஆனால் 57 சதவீதம் தமிழக வாக்காளர்கள் அவங்க வேற உலகத்துல வாழ்றாங்க. அந்த உலகத்தை புரிஞ்சுக்காம, இங்க அரசியல் பண்ண முடியாது. ரொம்ப வித்தியாசமான உலகம். அவங்க தாக்கம், எண்ணம்? எல்லாம் வேற. அதனாலதான் திரும்பத் திரும்ப சொல்றேன்..கிரவுண்ட் லெவல் பல்ஸ் வேற. அதனால பொறுத்திருந்து பார்ப்போம். இன்னைக்கு என்னுடைய கேஷை நான் ஆர்க்யூ பண்ணலாம். எப்போதுமே ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் நீங்க கேப்பிங்க. அண்ணனா என்ன ஆச்சு அப்படின்னு ? அன்னைக்கு பதில் சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.