
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எந்த மாதிரி கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு ”பொறுத்திருந்து பாருங்கள்” நிச்சயமாக எந்தெந்த கட்சி கூட்டணியில் சேரும் என்பதை ஊடகத்திற்கும் பத்திரிக்கைக்கும் நாங்கள் தெரிவிப்போம். வி.பி துரைசாமி கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற கேள்விக்கு, ”அதுக்கு நாங்க என்ன பதில் சொல்ல முடியும் ? அவர் சொன்னா நான் என்ன கருத்து சொல்ல முடியும். எங்களுடைய கருத்து இதுதான்.
எங்களுடைய முடிவும் அதுதான். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை தலைமைக் கழகத்தின் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அறிவிக்கப்பட்டு விட்டது. இதை வேண்டுமென்றே திட்டமிட்டு தினம்தோறும் கேட்டுட்டு இருந்தா நான் என்ன சொல்றது ? எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அதை வி.பி துரைசாமி கிட்ட தான் கேட்கணும். நாங்க என்ன சொல்றது ? எங்க கட்சி பத்தி தான் நாங்க சொல்ல முடியும் என தெரிவித்தார்.