
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம் நெருங்குவதால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இலவசமாகவே வழங்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொதுமக்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் நேற்று அதற்கான டெண்டர், ஓயாசிஸ் நிறுவனத்திடம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழி சரிபார்க்கும் கருவிகள் வழங்கப்பட இருக்கிறது.