தமிழக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 8.10.2023  வரை 335  ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவர். இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த பார்க்கிறார்கள், அது போலியானது. இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகிற பொழுது,  நான் கேக்குற ஒரே கேள்வி நீங்கள் 10 ஆண்டு காலமாக ஆட்சியில இருந்த அப்போ கண்ணை மூடி கொண்டதற்கு என்ன காரணம்?

பின்ன ஏன் இவ்வளவு கரிசனம்?  இவ்வளவு அக்கறை வந்தது ?  என்று தான் நான் கேள்வி கேட்டேன். அதற்கு பதில் சொல்லுங்கள்.  இஸ்லாமியர் மீது அப்போ இல்லாத அக்கறை இப்போது எப்படி வந்தது ?  என்று தான் என்னுடைய கேள்வி.. திமுக ஆட்சியில் தான் விடுதலை செய்யப்பட்டார்கள். அதை  மறந்துராதீங்க. நீங்க எவ்ளோதான் பாடுபட்டிருந்தாலும்,  விடுதலை செய்யப்பட்டார்களா ? இல்ல. திமுக ஆட்சி வந்த பிறகுதான் விடுதலை செய்யபட்டர்கள், அதையும் சொல்லுங்கள். 

எந்த அளவுக்கு அக்கறைகொண்டு இருக்கிறார்கள் என்பது இதுவே ஒரு சாட்சி. உள்ளபடியே இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருக்குமே ஆனால்,  கவர்னர் இடத்திலே  பல மாதங்களாக கோப்புகள் காத்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது அக்கறையோடு  கவர்னரை சந்தித்து அவர்களை விடுதலை செய்வதற்கு அழுத்தம் தருவதற்கு தயாராக இருக்கிறார்களா  ? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…  ஆயுள் சிறைவாசிகளாக சிறையிலே அடைபட்டு இருக்கக்கூடிய கைதிகளை விரைவில் விடுதலை செய்திட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திலே இந்த அவையிலே நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், மாண்புமிகு உறுப்பினர்  ஜவாஹிருல்லா அவர்கள், செல்வா பெருந்தகை அவர்கள்,  சிந்தனை செல்வம் அவர்கள்,  சின்னத்துரை அவர்கள்,

ராமசந்திரன் அவர்கள், ஜி கே மணி அவர்கள், ஜெகன் மூர்த்தி அவர்கள், பூமிநாதன் அவர்கள்,  ஆகிய 9 பேர் தங்களுடைய கருத்துக்களை எல்லாம் இங்கே எடுத்து சொல்லிருக்கார்கள். அந்த கருத்துக்களுக்கு எந்த வித மாறுபாடுகளை…  வேறுபாடுகளை நாங்கள் எடுத்து சொல்ல தயாராக இல்லை. ஆக அனைத்தையும் முழு மனதோடு இந்த அரசின் சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம், காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.