பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வரம்பு 21 ஆயிரம் ரூபாயாக உயரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

EPFO அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு ஊதிய வரம்பு உயர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அதேசமயம் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனமும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் EPF சந்தா கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.