தமிழகத்தில் காலாண்டு வாகன வரி, டீசல் வரிவிதிப்பு மற்றும் சுங்க கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என்றும் தமிழ்நாடு முழுவதும் 6.5 லட்சம் லாரிகள் இயங்காததால் 30 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.