
1000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று சில காலமாக யூகங்கள் நிலவி வருகின்றன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பல நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெற்ற ரிசர்வ் வங்கி, இனி இந்த நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என தெளிவுபடுத்தியுள்ளது.