
ஒவ்வொரு வருடமும் ஐபோன் வாங்குபவர்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஸ்மார்ட் போன்கள் உலக சந்தையில் அறிமுகமாகி விற்பனையாகி வருகிறது. பல நிறுவங்களின் மொபைல்களில் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே ஏராளமான வரவேற்பையும், அதிகமான பிரபலத்தையும் பெரும். ஆனால், ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது, எந்த ஒரு விளம்பரமும் அல்லாமல் தானாகவே அது ஏராளமான வரவேற்பை மிக சுலபமாக பெற்றுவிடும். அந்த வகையில்,
உலக அளவில் ஆப்பிள் ஐபோனுக்கான சந்தைகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்திய நாட்டின் தொழிநுட்ப சந்தை தான். இந்தியாவில் ஐபோன் என்பது பணக்கார நிலையை காட்டிக் கொள்வதற்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தோராயமாக ஐபோன் வாங்கும் நபர்களில் 10 ல் ஏழு பேர் ஐபோனை EMI ல் வாங்குவதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதையடுத்து ஐபோன் வாங்க வேண்டுமானால் கிட்னியை தான் விற்க வேண்டும் என்ற பிரபல காமெடியை குறிப்பிட்டு, கிட்னியை காப்பற்ற வந்த EMI ஆப்ஷன் என கூறி நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.