
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த கட்சி தான் உயிர் மூச்சு, எம்ஜிஆர்… என் அம்மா தான் என் உயிர் மூச்சு என்று வாழ்கின்ற… இந்த தாய்மார்களும், என் கழகத் தொண்டர்களும் களத்தில் பணியாற்றும் மறவர்களும் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவனாலும்… எந்த கொம்பனாலும்… ஒண்ணுமே செய்ய முடியாதுடா… எத்தனை வழக்கு வேணாலும் போடு நீ. அத்தனை வழக்கையும் ஈடேறி வரக்கூடிய இயக்கம்.
டாக்டர் சரவணன் எப்படி பேசுறாரு? சிகப்பா இருந்தா புரட்சித்தலைவரா ? செக்கச் சிவப்பா இருந்தா அம்மாவா ? எப்படி எல்லாம் ஊசி போடுறாரு. அவுங்க சிரிச்சிட்டு இருக்கும்போது ஊசி போட்டுருவேன். டாக்டர் அவருடைய நளினத்தை சொல்றாரு… தொழில் ரகசியத்தை சொல்றாரு… நம்முடைய புரட்சித் தமிழர் எடப்பாட யார் பற்றி தொட்டு கும்பிட்டாங்க.. அது உண்மைதான்.. கொடிய கொள்ளை நோய்.. யாருன்னா எதிர்பார்த்தோமா… கொரோனா வந்த காலத்துல பாருங்க…
ஒரு வீட்டில் கொரோனா வந்துருச்சுன்னா… அந்த வீட்டையே அடைச்சிருவாங்க… அதுலயும் கொடுமை.. கொரோனா வந்திச்சின்னா வீட்டுக்கார அம்மாவே பாக்காது. ஏய்.. போ போ.. ன்னு சொல்லிடுவாங்க … இவரே சொல்லிடுவாரு.. நீ நம்ம பிள்ளை எல்லாம் பாத்துக்கணும். என்ன கூட்டிட்டு போய்டுவாங்க. அப்ப என்ன செய்வாங்க ? கார்ப்பரேஷனுக்கு தெரிந்த உடனே அதை தகரம் போட்டு அடைச்சுச்சிடுவாங்க. தெருவையே அடைச்சிடுவாங்க. அங்க தகரம் அடைச்சிருக்குன்னா.. யாருமே போக மாட்டாங்க . இப்படி அந்த கொள்ளை… சண்டாள நோய் நம்ம ஆட்சியிலையா வரணும். நம்ம எடப்பாடி ஆட்சியிலா வரணும் தெரிவித்தார்.