
செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரை மாற்ற வேண்டுமென்று கூட்டத்தில் பேசவில்லை. பொதுவாக அகில இந்திய கட்சிகளை பொறுத்த வரைக்கும் மாநில தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வருஷங்கள் இருப்பார்கள். பிறகு அவர்களை மாத்திட்டு இன்னொரு தலைவரை போடுவது தொடர்ச்சியாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். காங்கிரஸில் மட்டும் அல்ல…
BJPயில் அண்ணாமலை இருக்காரு. அவருக்கு முந்தி ஒருத்தர் இருந்தாருல்ல… இப்போ அண்ணாமல இருக்காரு, இவரு போய்ட்டா இன்னொருத்தரு வருவாரு அப்படிதான். நான் இருந்தேன். எனக்கு அடுத்து அழகிரி வந்தார். நிரந்தர தலைவர்களாக இருக்க முடியாது. காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல, மார்க்சிஸ்ட், சி .பி.ஐ (சிபிஎம்) ஜனதா கட்சி உட்பட மாநிலத்துக்கு ஒரு தலைவர் போடுவாங்க.
பிறகு மாற்றி இன்னொருத்தரை போடுவாங்க. யாரும் நிரந்தர தலைவரா இருப்பதல்ல. அதனால கே.எஸ் அழகிரி வந்து அஞ்சு, ஆறு வருஷம் ஆயிடுச்சு. நார்மலா மூணு வருஷம், நாலு வருஷம் இருப்பாங்க. ஐந்து வருஷம் தாண்டி போயிட்டு இருக்கு அதனால கே.எஸ் அழகிரி மாற்றப்படுவாரா ? இந்த மாதிரி நீங்க தான் தொலைக்காட்சிகளில்….
பத்திரிகைகளில் அடிக்கடி போட்டுட்டு இருக்கீங்க.. சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு, யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? என தெரிவித்தார்.