
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு கொடுத்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கொடுத்தாங்களா.. போன வருஷத்துக்கு முந்துன வருஷம் கொடுத்தாங்க. அந்த பொங்கல் தொகுப்பில் பை உட்பட 21 பொருள் இருக்கு என சொன்னாங்க. அந்த பொங்கல் தொகுப்பில் வெள்ளம் கொடுத்தாங்க தெரியுமா ?
ஒழுகிற வெள்ளத்தை கொடுத்தாங்களா இல்லையா ? கொடுத்தாங்களா ? அந்த வெள்ளத்தை கொண்டு போக போக ஒழுகிற கிட்டே போகுது… அந்த ஒழுகிற வெள்ளத்தை கொடுத்த பெருமை ஸ்டாலினை சாரும். அவர் பொங்கலுக்கு வெல்லம் கொடுக்கல, மக்களுக்கு வெள்ளம் கொடுத்தாரு. அப்படிப்பட்ட ஆட்சி தான் திமுக ஆட்சி.
அதுல மட்டும் 500 கோடி ஊழல் செய்து இருக்காங்க. கொஞ்ச நஞ்சம் இல்ல… ஏழைகளுக்கு அந்த தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டும்… தை பிறந்தால் வழி பிறக்கும்… தமிழர்களுடைய திருநாள் தைத்திருநாள். அந்த தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காகத்தான் புரட்சித் தலைவி அம்மா இருக்கின்ற போது தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். அந்த பொங்கல் தொகுப்பிலே இந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் கொள்ளையடிப்பதற்காக 21 பொருளை கொடுக்கணும்னு சொல்லி ஒழுகிற வெள்ளத்தை கொடுத்த ஆசாமி தான் இன்றைய முதலமைச்சர் என் விமர்சித்தார்.