
திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு எதிர்க்கட்சியின்னு ஒன்னு இருக்கு. எதிர்கட்சின்னு இன்னைக்கு பேருக்கு தான் சொல்லுவாங்க. ஆனால் என்னைக்காவது அவங்க மக்கள் பற்றி பேசி இருக்காங்க…. மக்கள் பிரச்சினை பற்றி பேசி இருக்கிறாங்களா…. அவர்களுடைய பிரச்சனைகள் எல்லாம் எப்போதுமே நாற்காலியைப் பற்றி தான் யோசனை. அவங்களுக்கு பிரச்சனையே நாற்காலிதான்.
இப்போது கூட சட்ட சபையில அவுங்க மக்கள் பிரச்சனையை பேசினார் என்று நினைக்கிறீர்களா? ஏதாவது மக்கள் பிரச்சனை பற்றி பேசி வெளிநடப்பு செஞ்சாங்கன்னு நினைக்கிறீங்களா ? இல்ல.. யாரு பக்கத்துல, யாரு உட்காரனும். எங்களுக்கு அவர் பக்கத்தில் உட்கார முடியாது.. இவர் பக்கத்தில் உட்கார முடியாது… எங்களுக்கு சீட்டை மாத்தி குடுங்க. இதுதான் ஒரு எதிர்க்கட்சியின் உடைய பிரச்சனை.
ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த.. இந்திய ஒன்றியத்தின் மாபெரும் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய உடல் நிலை கருதி…. அப்போது நாம் எதிர்க்கட்சி. நாம ஒரு வேண்டுகோள் வச்சோம். கலைஞர் சட்டப்பேரவைக்கு வந்துட்டு போற மாதிரி இருக்கை வசதி செஞ்சு கொடுங்கன்னு… அதை பத்தி எல்லாம் கவலைப்படாம… செஞ்சு கொடுக்காதவங்க… இப்போது நாற்காலியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.