மீன ராசி அன்பர்களே,
இன்று தொட்ட குறை விட்ட குறை என அனைத்தையும் சரி செய்து விட முடியும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். சிலர் உங்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். சிலர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடும். தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பை போட வேண்டி இருக்கும்.
இன்று சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அணுகுலம் ஏற்படும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவ போய் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு மனக்கவலை தீரும். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும். இன்று மாணவர்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்