அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஒவ்வொரு வீட்டுக்கும் ஏழை குடும்பங்களுக்கு  விலையில்லா மின்சாரம் அன்னைக்கே கொடுத்தவர் கொடுத்தவர் எம்ஜிஆர். அதிலே 100 யூனிட் இலவசம் அம்மா கொடுத்தாங்க. 100 யூனிட் இன்னைக்கும் நாம் அனுபவிக்கிறோம்…. எல்லா குடும்பங்களுக்கும் மின்சார விளக்கு கொடுத்தவர் புரட்சி தலைவர்….  கூரை வீடுகளை எல்லாம் ஓட்டு  வீடாக மாற்றினார்.

அந்த காலத்துல பாத்தீங்கன்னா….   பூரா குடிசை பகுதி தான் இருக்கும்….  சௌராஷ்டிரா மக்கள் தான்  கொஞ்சம் காங்கிரீட் வீட்ல இருப்பாங்க. அதையெல்லாம் ஓட்டு வீடாக மாற்றியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். எப்படி எல்லாம் சட்டம் போட்டாரு ? இந்த மாதிரி விலைவாசி ஏறாமல் பார்த்துக் கொண்டார். இந்தியாவிலேயே முதன்முதலாக அரிசிக்காக உண்ணாவிரதம் இருந்த ஒரு முதலமைச்சர் என்றால் ? அது புரட்சி தலைவர் எம்ஜிஆர்..

மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வேணும். எங்க மக்களுக்கு அரசி  இல்ல. அரிசி கொடுத்தா கொடு… இல்லன்னா நான் சாகுறேன் அப்படின்னு மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்தார்.. ஓடோடி வந்தார் மத்திய அமைச்சர். அன்னை  இந்திரா சொல்லிட்டாங்க….  டேய் தமிழ்நாடே  கொதித்து எழப்போகுது….  உடனே போ…  எம்ஜிஆரை சமாதானப்படுத்து….  உடனே டிரெயினில் அரிசி அனுப்பிவிடு…. அப்படின்னு அரிசி தொகுப்பு வாங்குனவர்  எம்ஜிஆர்….

அதே வழியில் காவிரி நீர் பிரச்சினைக்காக அம்மா அவர்கள் 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தாங்க….  இதே மாதிரி வறட்சி ஏற்பட்டு போச்சு…..  இன்னைக்கு சும்மா உக்காந்துட்டு இருக்காங்க…. இன்னைக்கு  டெல்டாகாரன் என நம்ம முதலமைச்சர் சொல்றாரு… நமக்கெல்லாம் பெருமைதான்…. கலைஞர் காலத்திலும் டெல்டாக்காரன் என சொல்லுவாரு… ஆனால் அவங்க காலத்தில்  காவிரி நீர் கிடைக்காமல் போக காரணமா இருந்துச்டு என விமர்சனம் செய்தார்.