செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட கொடி கம்பத்தை தமிழக அரசாங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை அதை அகற்ற முன்வந்தார்கள்.  அப்பொழுது எங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் அதைக் கேட்க சென்றவர்கள் மீது மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை…

லத்தி சார்ஜ் பண்ணி… கொடூரமான தாக்குதல் நடத்தி…. எங்களுடைய நிர்வாகிகள் இன்றைக்கும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம்.  திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு உயரங்களில்….  பல இடங்களில் கொடி  வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையிலும்…..

ரோட்டிற்கு, பொதுமக்களின்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்ற வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி மட்டுமல்ல, அவர்களின் கொடி சார்ந்த பெரிய சுவரை எழுப்பி… பொது மக்களுக்கு இடையூறு செய்கின்றார்கள்.  அதையெல்லாம் தமிழக காவல்துறை கண்டு கொள்ளாமல்?  எங்களுடைய மாநில தலைவர் வீட்டிற்கு முன்னால் இருந்த கொடியை அகற்றியது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது.  வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எங்களுடைய தேசியத் தலைவர் திரு.நட்டா ஜீ அவர்களுக்கு   நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன்னா தமிழகத்தில் இன்றைக்கு ஒரு பெரிய தாக்குதல் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மீது நடந்திருக்கிறது. இதற்கு முன்னால் பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே… அவர்களை கைது செய்வது…..

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை திமுகவை சார்ந்தவர்களும்,  அல்லது மற்றவர்களும் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்கின்றார்கள். பல கம்ப்ளைன்ட்,  பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அதற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் முகநூலில் பதிவிட்டால் கூட அவர்களின்   பேச்சுரிமை பறிக்கப்பட்டு,  அவர்கள் கைது செய்து,  சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்ற இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இப்பொழுது அதற்கு அடுத்ததாக ஒரு படி மேலே சென்று பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி உள்ளது என தெரிவித்தார்.