
செய்தியாளராக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், DMK ஆட்சியில் டிசம்பர் 6 என்று வந்து விட்டால் திமுக ஆட்சி காலத்தில் நெருப்பை மடியில் கட்டிக்கிட்டு போற மாதிரி போகணும்… ஆட்டோவில் போனால் சகோதரிகளை பார்ப்பார்கள். மசூதிக்குள்ள நாய் விட்டார்கள்… பெரியவர்கள் 2000, 3000 வைத்திருவதற்காக தேச விரோத சட்டத்தில் கைது பண்ணிணார்கள்.
1998இல் மாதிரி குண்டு வெடிப்பு ஆன பிறகு தன்னுடைய ஆட்சி போய்விடும் என்பதற்காக… இஸ்லாமிய மக்கள் எந்த அளவுக்கு கொடுமைபட்டார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வளவு கொடுமைகள் நடந்தது. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது எந்த ஒரு பிரச்சினையாவது இருந்ததா ? இந்தியா ஃபுல்லா பிரச்சனை இருந்தது.
கர்நாடகாவில் இருந்தது… கேரளாவில் இருந்தது…. ஆந்திராவில் இருந்தது…. நம்ம போலீஸை அம்மா அனுப்பினார்கள்… இங்கு ஒரு எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழுகின்ற ஒரு மாநிலம் என்ற வகையிலே…. தமிழ்நாடு மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் அரவணைத்து ஒன்றுபட்ட சகோதரர்களாக உருவாக்கி…
அம்மா அவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை, அதுதான் முக்கியம். நம்மதியாக வாழ வேண்டும். அமைதியான வாழ்க்கை. யாருடைய ஆட்சிக் காலத்தில் இருந்தது. எங்க ஆட்சி காலத்தில் இருந்தது. எங்கு இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது ஒரு சின்ன இன்னல்கள் இருந்ததா ? கிறிஸ்துவ மக்களுக்கு இன்னல் இருந்ததா ? திமுக ஆட்சியில் இருந்தது என விமர்சனம் செய்தார்.