
செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பிஜேபி நேற்று காலை துவங்குன கட்சியா ? இவ்வளவு நாள் இருந்தவர்கள்… திடீரென்று சட்டத்திற்கு விரோதமாக கொடி ஏற்றுகிறார்கள். எங்கேயுமே கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்பது விதி. கொடி கம்பம் விழுந்து எத்தனை பேர் செத்திருக்கிறார்கள் ? என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.
ஊடகங்களில் காட்டியிருக்கிறீங்க. அதற்கு பிறகு தான் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே எங்களுடைய தலைவர் கொடிமரங்கள் எல்லாம் வைக்க கூடாது என சொன்னாரு. அவரு மேயராக இருந்த போது தான் சென்னையில் எல்லா கட்சி கொடி கம்பங்களை எல்லாம் அகற்றினார்.
அதே மாதிரி இந்த சட்டம் இருக்கிறபோது… தீடிரென சண்டை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அவர் செய்கிறார்கள். எந்த இடத்தில் DMK கொடி கம்பம் அனுமதி இல்லாமல் இருக்குன்னு சொல்லுங்க. இடிக்கிறதுக்கு தயாராக இருக்கின்றோம். எங்க கொடி கம்பத்தையே நாங்க எடுத்து இருக்கோமே. அதுதான் சொல்றேன், சென்னை மேயராக இருக்கிறபோது…
இன்றைய முதலமைச்சர், சென்னையில் ஒரு கொடிமரம் கூட இருக்கக் கூடாதுன்னு எடுத்தாரு. எடப்பாடியை சந்திக்கிறது எல்லாம் லெட்டர் பேட் கட்சி வைத்திருக்கிற முஸ்லீம் கட்சியின் தலைவர். உண்மையான முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் எங்களோடு தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.