
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், காவேரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை எங்க பொதுச்செயலாளர் கூட்ட சொன்னாரு …. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரி நதிநீர் பிரச்சினையை பேசுவதற்கு இந்த ஸ்டாலினுக்கு ஏன் பயப்படுகிறார் ? ஏன் அஞ்சுகிறார் ?
என்ன நோக்கம் ? தன்னை டெல்டாக்காரன்… டெல்டாக்காரன்… திருக்குவளைகாரன் என்று சொல்கிறாரே, உண்மையிலேயே உன் பரம்பரை திருக்குவளையாக இருந்து ஒருந்தால் ? நீ டெல்டாக்காரனாக இருந்து இருப்பாய். அதனால் டெல்டாகாரின் உண்மையாக அக்கறை இல்லை. டெல்டா விவசாயிகள் மீது உனக்கு அக்கறை இருந்திருந்தால் ? அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிருக்க வேண்டும் அல்லவா ?
முதலமைச்சரே அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டு….. டெல்லிக்கு சென்று…. பிரதமரை பார்த்திருக்க வேண்டுமா ? இல்லையா ? நீதிமன்றத்திலே அவமதிப்பு வழக்கு போட்டு இருக்க வேண்டுமா ? இல்லையா ? உச்சநீதிமன்றம் சொல்லிய பிறகும், தண்ணீரை தரவில்லை என்ற உடனே உச்சநீதிமன்றத்திலே கர்நாடக அரசின் மீது அவமதிப்பு வழக்கு போட்டிருக்க வேண்டுமா ? இல்லையா ? ஏன் போடல ? ஏன் செய்யல ?
தமிழ்நாட்டு மக்கள்…. கோடிக்கணக்கான விவசாயிகளின் 3 லட்சம் ஏக்கர் பயிர் கருகிப்போச்சு. எப்படி போனாலும்எனக்கு கவலை இல்லை. தஞ்சையில் ஒரு விவசாயி… தான் வைத்த பயிடீ கருகிப் போனதை பார்த்து அதே இடத்திலே இறந்துட்டார்.
இதுவரைக்கும் 10 பைசா தரல. ஆனால் சாராயம் குடிச்சு செத்தா 10 லட்சம். கள்ள சாராயம் குடிச்சு செத்தா 10 லட்சம். டெல்டாக்காரன் டெல்டாக்காரன் சொல்ற ஸ்டாலின்…. உன் டெல்டாவில் தான் பயிர் தண்ணீர் இல்லாமல் கருகிப்போனதை பார்த்து உயிர் நீத்த விவசாயிகளுக்காக ஏன் நீதிமன்றத்தை நாடல்ல ? என கேள்வி எழுப்பினார்.