15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக அரசு அதற்கான விவரங்களை சேகரிக்கிறது. இந்த நிலையில் பழமையான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.