
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, நீட் என்ற இந்த கொடிய நோயை அகற்றுவதற்காக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக போராடிய இந்த போராட்டம், கண்டிப்பாக ஒரே நாளில் முடியாது. இது தொடர் போராட்டம். இந்த போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்றால், வெற்றியடைய வேண்டும் என்றால் , தமிழ்நாட்டு மக்களுக்கு நீட்டால் எந்த பாதிப்பு வருகிறது என்பதை உணர்த்த வேண்டும் என்று தொடர்ந்து போராடுகின்ற மிகப்பெரிய போராளி…
நமது கழகத்தின் எதிர்காலம்… தமிழகத்தின் வருங்காலம்…. என் ஆருயிர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இந்த நிகழ்ச்சிக்காக நான் காரில் வரும் பொழுது அமைச்சர் உதயநிதி, அண்ணன் உங்கள் தொகுதியில் முதல்வர் வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகவில்லையா என்று கேட்டார் ? இல்லை உதய் நான் இதுக்கு தான் வரேன்… நீங்க அதுக்கு போறீங்களா என்று கழட்டி விடுகிற மாதிரி கழட்டிவிட்டார். இல்லை நான் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வரனும்.
அது ஏன் என்று சொல்கிறேன் ? இன்று தன் தங்கையை இழந்து வாடுகின்ற மணிரத்தினம் இருக்கின்றார். அனிதா இறந்த பொழுது ஒவ்வொரு பெற்றோரும் கண்கலங்கி, கதி கலங்கி நின்றார்கள். அந்த பெற்றோரில் நானும் ஒருவன். ஏனென்றால் ? இந்த உண்மை எனக்கு நடந்தது.
எனக்கு நடந்த உண்மை கதையை சொல்ல சரியான மேடை இது தான். நான் திமுக, எங்க அப்பா திமுக எங்க தாத்தா திமுக, தம்பி திமுக, குடும்பமே திமுக. ஹிந்தி எதிர்ப்பு.. நாங்கள் எல்லாம் படித்தது ஸ்டேட் போர்டு ஸ்கூல். சிபிஎஸ்இ ஸ்கூலில் நாங்க படிக்க மாட்டோம் ஏனென்றால், நான் இந்தி படித்து என்ன புடுங்க போகிறேன் என சொல்லி நாங்க ஹிந்தி படிக்கவில்லை என தெரிவித்தார்.