செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலோர மேம்பாட்டு திட்டம் தான் சொல்லி ஆய்வு செய்துள்ளார்கள்.  வெகு சீக்கிரத்தில் ஆய்வு செய்து ஒன்றிய அரசாங்கத்தில் உள்ள துறைக்கு அனுப்பி  துண்டில் வளைவு அமைக்கப்படும். ரெண்டு மாசம்… இல்ல மூணு மாசத்துக்குள்ள எல்லாம் முடிவுந்துவிடும். இலங்கையில 133 நம்மளுடைய மீனவர்களோட படகு இருக்கு.  மீனவர்கள் பிடிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால்,

உடனடியாக  நம்மளுடைய தமிழகத்தினுடைய முதலமைச்சர் அந்த மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகின்ற   படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்ற வகையிலே…. மத்தியில் இருக்கின்ற வெளியுறவு துறையாக இருந்தாலும் சரி…. பிரைம் மினிஸ்டர் ஆக இருந்தாலும் சரி அவர்களுக்கான கடிதங்களை அனுப்பி அந்த மீனவர்களை காக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால்,  அதிகாரம் என்பது ஒன்றிய அரசாங்கத்தோடு இருக்கின்றது. இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் நினைத்தால் அந்த படகுகளை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து  தர முடியும். ஒன்றிய அரசாங்கம் நினைத்தால் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வழி இருக்கின்றது.ஆனால் தமிழக பாஜகவினர் , மீனவர்களை மீட்க நாங்களும் கடிதம் அனுப்புகின்றோம் என சொல்கின்றார்கள். மொத்தமாக படகுகளை மீட்டு தருவோம்…. மொத்தமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் காப்போம் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்கள்.