தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் மிக கனமழையும் ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் காஞ்சி செங்கல்பட்டு விழுப்புரம் பெரம்பலூர் அரியலூர் சிவகங்கை தூத்துக்குடி நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.