
எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தூது விட்டது என்று சொல்வது வடிகட்டிய பொய் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது. ஒன்றுபட்டால்தான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். நானும் டிடிவி தினகரனும் இணைந்து செயல்படுகிறோம். சசிகலா எங்களுடன் வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.