செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எங்களது அழைப்பை ஏற்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு வருகை தந்திருக்கும் அன்பிற்குரிய ஊடக உறவுகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழகத்தினுடைய அவசரகால சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டு…… ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு அல்லது கிடப்பில் போடப்பட்டு, ஆளுநர்  அங்கீகரிக்காத கோப்புகள்…. வெகு காலமாக கிடப்பில் கிடக்கின்ற காரணத்தால் அவற்றையெல்லாம் மீண்டும் அழுத்தம் கொடுப்பதற்காக,  ஆளும் திமுக அரசு நடத்திய அவசர சட்டமன்ற தொடரில் கலந்து கொண்டு,

அதற்குப் பிறகு ஊடகங்களை சந்தித்து பேசிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரிப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு,  அதில் வெற்றி பெற்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,  கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்…. புரட்சித்தலைவி அம்மா அவர்களால், இந்த இயக்கத்திற்கு காலம் கொடுத்த பரதன் என்று மகுடம் சூட்டப்பட்ட மகத்தான மனிதர்…. தடித்த வார்த்தைகள் கொண்டு யாரையும் தாக்காத தன்மையாளர்…..

புரட்சித்தலைவி அம்மாவின் உடைய உண்மையான விசுவாசி என்பதற்கான உரிமைக்காரர்… பெரிய குளத்து பெரிய மனத்தார் அண்ணன் ஓபிஎஸ் குறித்து, ஒரு முன்னாள் முதலமைச்சராக… நான்கரை வருடம் எந்த ஓபிஎஸ் அவர்களுடைய தயவிலே ஆட்சியை நடத்தினாரோ,   எந்த ஓபிஎஸ் அவர்களிடம் வந்து கவிழ காத்திருக்கும் என் அரசாங்கத்தை காத்துக் கொடுங்கள் என்று தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மணிகளை எல்லாம் அனுப்பி…. சமரசம் பேசி,  தர்ம யுத்தத்திலே உக்கிரமாக இருந்த அண்ணன் ஓபிஎஸ் அவர்களுடைய மனதை கரைத்து…..

அம்மா அமைத்துக் கொடுத்த அரசாங்கம் கவிழ்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாமா என்றெல்லாம்,  வேண்டுகோள் வைத்ததின் பேரிலே….  அடிப்படையில் இரக்க மனம் கொண்டவர்,  இரட்டை இலை  இயக்கத்தின் மீது அளவில்லாத பற்று கொண்டவர்…. மும்முடி  சோழனாக  மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர்,  அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் நான்குரை வருடங்கள் எடப்பாடி முதலமைச்சராக இருப்பதற்கு எத்தகைய இடையூறும் இல்லாமல்…..  அனைத்து வகையிலும்  பக்க துணை நின்றார்.

அதற்கு பிறகு ஒற்றை ஓட்டில்…..  இருவர் தேர்வு என்கின்ற ஒரு மோசடியான தேர்தலை….. தொண்டர்களை ஏமாற்றக் கூடிய தேர்தலை….. உள்ளத்துக்குள் நஞ்சை வைத்துக்கொண்டு,  உதட்டிலே வெள்ளத்தை ஊட்டிய எடப்பாடி,    ஒற்றை தலைமை கற்பனை என்று ஊரை ஏமாற்றினார்…..  ஊடகங்களை ஏமாற்றினார். இப்படி எல்லாம் ஏமாற்றி,  இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரிக்க கத்தை பணத்தை களத்தில் இறக்கி…  மொத்த தமிழகத்தையும் நான் விலைக்கு வாங்குவேன் என்ற முஸ்தி மோதலில்  ஈடுபட்டு இருக்கின்றார் என தெரிவித்தார்.