
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், தொண்டர்களுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த உரிமையை எடப்பாடி என்கின்ற தனி நபர் பறித்திருக்கிறார். 33 வருடங்கள் அண்ணா திமுகவுக்கு பொதுச்செயலாளராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூட எம்ஜிஆர் தொண்டர்கள் கொடுத்த எந்த விதிகளையும் மாற்றவில்லை. ஒரு தொண்டனும் தலைமையை தீர்மானிக்க முடியும்…. ஒரு தொண்டனும் தலைமைக்கு வந்து அமர முடியும் என்பது தான் அண்ணா திமுகவின் ”பிறப்பு நோக்கம்”.
அந்த கட்சி பிறந்ததுடைய நோக்கமே ஒரு தொண்டன் கூட தலைவனா வரணும்….. ஒரு தொண்டன் தான் தலைவனை தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தோற்றுவித்ததற்கான மூலகாரணம். இந்த அடிப்படை முகாந்திரத்தையே உடைத்தெறிந்து விட்டு, எடப்பாடி தரப்பும் – அவருக்கு சாதகமாக இருக்கக்கூடிய சிலரும் என்ன கேட்கிறார்கள் ? இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே மாற்றங்கள் வருகிற போது,
ஒரு அரசியல் கட்சியின் விதிகளிலேயே மாற்றம் வரக்கூடாதா என்று கேட்கிறார்கள் ? ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்…. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தாலும், அந்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றக் கூடாத அம்சங்கள் என்று பல இருக்கின்றது. உதாரணத்திற்கு இந்த தேசம் மதச்சார்பற்ற நாடு என்கின்ற கொள்கையை யாரும் மாற்ற முடியாது.
அதுபோல மாற்றக்கூடாத விதி. அதே போல உடலில் நீங்கள் எதை மாற்றினாலும், மூளையை மாற்ற முடியாது. அதுபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாற்றுவதற்கு ஆயிரம் அம்சங்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் எழுதி வைத்த விதி எண் 43 அந்த 20 சிறப்பு சரத்து என்ன சொல்கிறது என்னவென்று கேட்டால், இந்த விதியை மட்டும் யாரும் மாற்றக்கூடாது என்று புரட்சித்தலைவர் சாசனமாக….
உயிலாக எழுதி வைத்ததை எடப்பாடி என்கின்ற ஒரு நபர் மாற்றுகிறார். ஒருவேளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்…. எடப்பாடி ஏழையாக இருந்திருந்தால்….. பணத்திற்கு கஷ்டப்படக்கூடிய ஒரு பரதேசியாக இருந்திருந்தால்….. இந்த சட்ட திருத்தத்தை அவர் நடத்தி இருக்க முடியுமா ? அப்படி ஒரு திருத்தத்தை இவர் கொண்டு வருவதை…. இன்றைக்கு அவருக்குப் பின்னால் நின்று ஜால்ரா அடிக்கக்கூடிய ஆட்கள் ஆதரிப்பார்களா ? என்பதை தமிழ்நாட்டு மக்கள் யோசித்துப் பார்த்துக் கொள்கிறார்கள். ஊடகங்களும் உங்களுடைய பார்வைக்கு நான் விட்டுவிடுகிறேன் என தெரிவித்தார்.