
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உன் குண்டாஸ் எல்லாம் தூக்கி போடு.. நாங்க அனுபவிக்காத குண்டாஸ்…. தேசிய பாதுகாப்பா ? எவ்வளவு நாளைக்கு அடைக்கிடு விட முடியும். நெருப்பை எவ்வளவு நாள் குப்பையை கொட்டி மூடி விடுவீர்கள்? எவ்வளவு நாள் மூடி விடுவீர்கள் ? அடக்கு முறையும், ஒடுக்கு முறையும் எவ்வளவு நாள் இருக்க முடியும்.
புரட்சி என்பது ஒரு தலைகீழ் மாற்றம். மேலிருப்பது கீழே வந்து விடும்… கீழ் இருப்பது மேலே போய்விடும்… இன்னைக்கு வீதியில் நின்னு கத்துகின்றபவன் ஒருநாள் அதிகாரத்திற்கு, மேலே வருவான். அதிகாரத்தில் இருப்பவன் வீதிக்கு வருவான், அது மாறும். எது ஒன்றும் சாத்தியத்தில் இருந்து பிறப்பதில்லை. தேவையில் இருந்து தான் பிறக்கிறது.
நாம் எந்த கேள்வி எழுப்பினாலும் துறை சார்ந்த அமைச்சர்களை பேசவிடாமல், சபாநாயகரே பேசி விடுகிறார் என்று, என்னிடம் நெருக்கமான தலைவர்கள் எல்லாம் சொன்னது உண்டு. அது அவருடைய குணம் அப்படி. அதை ஒன்றும் பண்ண முடியாது. சபாநாயகர் ஐயாவை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களுக்கு அனுப்பி இருக்கணும்… அவரை சபாநாயகராக பொறுப்பு கொடுத்து, பேச விடாதால் இதிலாவது பேசி விடலாம் என்று பேசுகிறார் என தெரிவித்தார்.