”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறுபடியும் ஒரு வெற்றி விழா நிகழ்வில் மீதியை பகிர்ந்து கொள்வோம்…   எல்லாருக்கும் பாராட்டு. இயக்குனர் முதல் படம் மாதிரி செய்யவில்லை…   பல படங்கள் எடுத்து,  இயக்கிய அனுபவம் பெற்ற இயக்குனர் போல செய்திருக்கின்றார். தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் இந்த படம் மாபெரும் வெற்றி அடையும், அதில் எந்த மாற்றமும் இல்லை.

படர் குழுவினர்… உழைத்த ஒவ்வொருத்தரும்…. எல்லோருக்கும்….. அவர் சொல்லும் பொழுது பறந்த காக்கை… சொல்லும் பொது  நகர்ந்த புறா எல்லாருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்,  உண்மையிலே சிறந்த படைப்பு. ஜோ என்று பெயர் வைக்கும் பொழுது என்னோமோ நினைச்சேன். என்ன  ஜோ என்று பெயர் இருக்குன்னு நினைச்சேன்.  ஆகச் சிறந்த உணர்வு  நிகழ்ச்சியான காதல் படம். ஒரு குடும்ப படம். அதோடு நல்லா இருக்கிறது  படம்.

இது சிறிய படம் அல்ல…  சிறிய படம், பெரிய படம் என்று ஒன்றும் கிடையாது.  அயோத்தியில் தம்பி சசி நடித்தது. சிறிய படம் தான்… பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் எதிர்பார்க்கப்பட்டு விழுந்திருக்கிறது.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிறிய படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இங்கே எல்லா படமும் அப்பா வரும் பொழுது 16 வயதினிலே எல்லாம் சிறிய படங்கள் தான் அப்பொழுது….

என்ன மாதிரி ? ஒரு வருடங்கள் எல்லாம் ஓடின படம் எல்லாம் இருக்கிறது. இந்த படம் படமாக சிறிய படம் இல்லை.  நடிகர்கள் எல்லாம் சிறிது….  சிறப்பாக எடுத்திருக்கிறார்…. நிறைய பொருள் செலவு பண்ணி,  விரும்பிய படப்பிடிப்பு தளத்தில் போய்…. படம் பார்க்கும் பொழுது பிரம்மாண்டமாக இருந்தத.  ரொம்ப நாள் ஆச்சு…. இந்த மாதிரி காதல் படங்கள் வந்து….  மிக நெகிழ்ச்சியான படம்.  15 – 20 வருடம் ஆகிறது இந்த மாதிரி படம் வந்து…

யாரும் இப்படி எடுப்பதில்லை…  எல்லாம் அடிதடி என்று போய்க்கொண்டிருப்பதால்….  ஒரு குடும்பத்தோடு எல்லாரும் முகம் சுளிக்காமல் பார்க்கின்ற காதல் படங்கள் வரவில்லை. சிறந்த படம்… சிறிய படம்,  பெரிய படம் என்று இல்லை… திரையரங்கிற்கு போன…. ஊடக வியலாளர்களே பார்த்திருப்பார்கள்…. பத்திரிகையாளர்கள் பார்த்திருப்பார்கள்… அவர்களிடம் கேளுங்கள்…. திரையரங்குகள் போயி முதல் காட்சியை பார்த்ததிலிருந்து….. படம் பிச்சிட்டு போகும் என தெரிவித்தார்.