
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. தமிழக போக்குவரத்துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து துறை சார்பில் வரும் டிசம்பர் 19ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அன்றைய தினம் தமிழகத்தில் பேருந்துகள் ஓடாத நிலை ஏற்படும் என்று தெரியவருகிறது.