
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நான் பேசியதை காட்டிட்டு இருந்தாங்க. பிறகு அந்த லைவ்-வை கட் பண்ணிட்டாங்க. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2018-ல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கல்விக்கு முன்னுரிமை தந்தார்கள்….
பல பல்கலைக்கழகம் துவங்குவதற்கு அடித்தளம் அமைத்தார்கள்… மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா களத்தில் தான் நிறைய கலை மற்றும் அறிவியல் கல்லூரி வந்தது. அதேபோல மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வந்தது. வேளாண்மை கல்லூரி வந்தது. கால்நடை மருத்துவ கல்லூரி வந்தது, பாலிடெக்னிக், ஐடி இப்படி பல கல்லூரி வந்தது.
2011ல் ஆட்சி மாற்றம் வந்த பிறகு தமிழகத்தினுடைய முதலமைச்சராக அம்மா பொறுப்பு ஏற்கின்ற பொழுது தமிழகத்தில் உயர்கல்வி படிப்பின் உடைய எண்ணிக்கை நூற்றுக்கு 34 சதவீதம் இருந்தது. அண்ணா திமுக அரசு பத்தாண்டு காலம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக…. அதிகமான நிதி பள்ளி கல்வித்துறைக்கும், உயர்கல்விக்கும் ஒதுக்கியதன் விளைவாக…..
புதிய கல்லூரிகள் அதிக அளவில் திறந்தால் ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட – நசுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை அண்ணா திமுக ஆட்சி உருவாக்கியது. இந்தியாவில் 2030ல் தமிழ்நாடு அடைய வேண்டிய இலக்கை, 2019 20இல் நூற்றுக்கு 52 பேர் இன்றைக்கு உயர்கல்வி படிக்கின்ற நிலையை உயர்த்தி காட்டிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அதை எல்லாம் சொன்னேன். அதை எல்லாம் எடிட் பண்ணி… லைவ்ல கட் பண்ணி விட்டுட்டாங்க என தெரிவித்தார்.