
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நாங்களே பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி விட்டோம். அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிட்டோம். அதுக்கு மேலையும் பேசிக்கிட்டே இருக்காரு. ஏன்னா.. எல்லாமே ஏமாற்ற வேலை. இப்போ சிறுபான்மை மக்களுடைய வாக்குகள்.. இதுவரை இதை சொல்லி சொல்லி வாங்கு வாங்கிட்டு இருந்தாங்க. இன்னைக்கு அதுக்கு வழி இல்ல.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதிலிருந்து இதே பேச்சு தான்.. ஏனென்றால் அவர்கள் தலைவர் ( ஸ்டாலின் ) நான் பேசுறதுக்கு எல்லாம் பதிலே சொல்ல முடியல. உங்களுக்கு தான் தெரியும் இல்ல… எல்லாம் லைவ்ல வந்தது. சட்டமன்றத்தில் நான் என்னென்ன கேள்வி வைத்தேன். அதுக்கு சரியான பதிலையே கொடுக்க முடியலையே.
இன்னும் தேர்தல் காலம் நெருங்கவில்லை. கால அவகாசம் நிறைய இருக்குது. நிச்சயமாக தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் நல்ல கூட்டணி அமையும். அதேபோல மக்களிடத்தில் மிகுந்த பெரிய வரவேற்பு இருக்கின்றது. எங்களுடைய 82 கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில்…. பொறுப்பாளர்கள் நியமித்துள்ளோம். அனைவரும் இரவு, பகல் பாராமல் தலைமை அறிவித்து அறிவிப்பின்படி…. பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் குழு அமைத்தல் என்கின்ற பணியை வேகமாக… துரிதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.