
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துள்ள அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அனிமல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, பெரிய நடிகர்களின் படங்களில் நான் இருப்பதற்கு எந்தவித ரகசியமும் இல்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதையை கேட்பேன். இயக்குனரை நம்புவேன். அதற்கு மேல் என் கையில் எதுவும் இல்லை. மேலும் எனக்கு கதை தான் முக்கியம் மொழி அல்ல என்று தெரிவித்துள்ளார்.