
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற விதத்தில், ஒவ்வொரு பாராளுமன்றத்திலும்…. 5 பூத்துகளை உள்ளடக்கிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு என்று தனியாக கூட்டங்கள்…. அவர்களுக்கு என்று பயிற்சி முகாம்….. பூத் கமிட்டி அமைப்பதிலே, ஒவ்வொரு பகுதிக்கும் அவை ஏ,பி,சி என்று கிரேடுகளை பிரித்து….
எவையெல்லாம் வலிமை குறைந்த பூத்துகளாக இருக்கிறதோ, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து… அங்கு எல்லாம் அரசாங்கத்தின் திட்டங்கள், கட்சியினுடைய வேலைகள் என்று அந்த ஒவ்வொரு பூத்திலேயும் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகிகளை, தொண்டர்களை நாங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். பூத் கமிட்டி அமைப்பதற்கான பணி வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது…..
வழக்கமாக தமிழகத்தில் பருவமழை காலத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், கோவை மாநகராட்சியை பொருத்தவரை மழை நீர் தேங்குகின்ற குறிப்பிட்ட இடங்களில் இன்னும் கூட தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக தெற்கு சட்டமன்ற தொகுதியிலும் கூட லங்கா கார்னர் பகுதி எல்லாம் இன்றுமே சிரமத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள்.
ஒரு நீண்ட கால தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தாமல், அவசர கதியிலே திட்டங்களை செயல்படுத்துவதால்…. நிறைய இடங்களில்….. என்னுடைய தொகுதியிலே ரோடு போட்டது சரியில்ல அப்படின்னு சொல்லிட்டு மாநகராட்சியினுடைய ஆணையாளர் பரிசோதித்து அவங்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததா கேள்விப்பட்டு இருக்கேன்…. இந்த மாதிரி அரசாங்கத்தினுடைய பணிகள் எல்லாமே ஏதோ அரைகுறை வேகத்தோடு அல்லது மெத்தனமாக…. முழுமையாக….
நல்ல தரத்தோடு இல்லாமல் இருக்கின்ற சூழலில் கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இருக்கு. அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.