
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்து வருகிறார். இதில் பேசிய அவர், நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 24 மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என்று அறிவிப்பு செய்தார்கள். அந்த வகையில் இதுவரை 9 குழந்தைகள் பிறந்திருக்கிறது. நேற்று இரவில் இருந்து பிறந்த 9 குழந்தைகளுக்கு நானும், முன்னாள் மத்திய அமைச்சர் பெருந்தகை இனிய சகோதரர் திரு தயாநிதி மாறன் அவர்களும் தங்க மோதிரங்களை தந்திருக்கிறோம். இன்று இரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகளுக்கு நாளை காலை மதன்மோகன் மீதம் இருக்கின்ற மோதிரங்களை தருவார் என தெரிவித்தார்.
பொதுவாகவே டெங்கு மாதிரியான வைரஸ் காய்ச்சல் இருப்பவர்கள் வெளியில் செல்லும்போதோ, இருமும்போதோ, தும்மும்போதோ அவர்களுடைய நீர்த்துவலைகள் மற்றவர்கள் மீது படும் பட்சத்தில் அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். என்பதாலே தான் முக கவசம் அணிவது என்பது அவசியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கூட கட்டாயம் என்று சொல்லவில்லை. அணிந்து கொண்டால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் செயலிலாழ்ந்து பெண் இறந்த புகாருக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுபராமணியன், ஒரு கட்சியின் தலைவர் ஒரு செய்தியை நன்றாக உணர்ந்து கொண்டதற்கு பிறகு அறிக்கை வெளியிடுவது உகந்ததாக இருக்கும். 25ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவக் கல்லூரியில் 48 வயது அமராவதி என்கின்ற ஒரு சகோதரி சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அனுமதிக்கப்படுகின்ற போது அவருக்கான ஆக்சிஜன் அளவு 82% , இரத்த அழுத்தம் 80 MMGH, குறைந்த அளவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் நாள்பட்ட காச நோயால், இரு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, சுவாச செயலிழப்பு ஏற்பட்டதோடு கிருமித் தொற்று ரத்தத்தில் கலந்து இருந்து இருக்கின்றார். உடனடியாக அவருக்கு உயர் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், இரத்த அழுத்தத்தை சரி செய்யும் உயர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் மற்றும் தொடர் நேர்மறை அழுத்த சுவாச கருவிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 26. 11 காலை 8 மணிக்கு நோயாளியின் உடல் மிகவும் மோசமடைந்திருக்கிறது. அந்த நேரத்தில் ஐந்து நிமிடம் மின்சாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவங்கள் வெண்டிலேட்டர் வசதியிலிருந்து இருந்து இருக்கிறார்கள். அங்கு 5 வெண்டிலேட்டர் இருக்கின்றது. ஐந்து வெண்டிலெட்டர்களும் மின்சாரம் அணைந்தாலும் கூட பேட்டரி பேக்கப் இருக்கும். உடனடியாக பேட்டரி உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயங்கும். அந்த வகையில் அந்த வெண்டிலேட்டர்கள் இயங்கியிருக்கிறது.
இவரை தவிர்த்து மற்ற நான்கு பேரும் நன்றாகவே இருக்கிறார்கள். எனவே மின்சாரம் தட்டுப்பாடு அந்த ஐந்து மணித்துளிகள் ஏற்பட்டதால் உயிரிழப்பு என்று சொல்வது, ஒரு படித்த அரசியல்வாதிக்கு இது சரியான ஒன்றுதானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பேட்டரி பேக்கப் இருப்பது கூட தெரியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், ஒரு ஐந்து 10 மணி துளிகள் ஒண்ணும் ஆகி விடாது. பேட்டரியோடு உதவியோடு அந்த வெண்டிலேட்டர் இயங்கும்.
எனவே அதனால் உயிர் பாதிப்பு இல்லை. அதற்காக அவர் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறார். அவர் அறிக்கையை நான் பார்த்தேன். முதல்வரை பற்றி அவர் ரொம்ப மோசமாகவும் சொல்லி இருக்கிறார். மாண்புமிகு முதல்வர் நேற்றைக்கு மருத்துவத்துறை பற்றி பேசும்போது ஐரோப்பிய மருத்துவத்திற்கு இணையாக தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது என்று சொல்கிறார். இது தமிழ்நாட்டு மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.