
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி, சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி, இன்றைக்கு மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
யார் வேண்டுமானாலும் குழப்பலாம்…. அண்ணாமலை போன்றோர் குழப்பினால் கூட கவலைப்பட மாட்டேன். ஆனால் ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சர்…. நம்முடைய மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு பேட்டியை தருகிறார். என்ன பேட்டி என்றால் ? நாம் கோவிலை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோமாம்.
அதற்கு நம் சேகர் பாபு அவர்கள் மிக விளக்கமாக…. தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்… நான் அதற்கு மேற்கொண்டு விளக்கம் சொல்ல விரும்பவில்லை…. நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்…. இதுவரை 5500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது என்றால், அது திமுக ஆட்சி தான், திராவிட ஆட்சி தான்.
உள்ளபடி பக்தி என்று அவர்களுக்கு இருந்தது என்றால், என்ன செய்யணும் என்றால் ? திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். பக்தி இல்லை, பகல் வேஷம் அது. மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் உண்மை. இந்த நிலைதான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.