சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.