
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்…. செயற்கை வெள்ளம், இயற்கை வெள்ளம் என்கிறார். மிக அற்புதமாக கண்டுபிடித்து இருக்கிறார். அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். எங்கேயாவது இயற்கை வெள்ளம், செயற்கை வெள்ளம் என நான் கேள்விப்பட்டதே கிடையாது.
நான் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன். செயற்கை வெள்ளம், இயற்கை வெள்ளம் கண்டுபிடித்த முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். திட்டமிட்டு கடந்த அண்ணா திமுக ஆட்சியை குறை சொல்லிக் கொண்டு இருக்கின்றார். இன்றைக்கு செம்பரப்பக்கம் ஏரியிலிருந்து 35,000 கன அடி தான் திறக்க முடியும். நீங்க முதலமைச்சராகஇருக்கிறீங்க… போய் பார்த்துக்கோங்க.. இப்பவும் பார்க்கவில்லை என்றால், முதல்வராக இருக்க தகுதியே கிடையாது. முதலமைச்சர் பதவிக்கு தகுதியே கிடையாது.
அதற்கு கீழே இருக்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில் கனமழையின் காரணமாக ஏரிகள் நிரம்பி, உபரி நீர் அடையாற்றில் வந்தது. அதனால் தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது கூட தெரியாத ஒரு முதலமைச்சர்…. அதுதான் பொம்மை முதலமைச்சர் என சொல்லிட்டு இருக்கோம்.
அதோடு கனமழையால் பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளில்…. அந்த அங்கு இருக்கிற கார்கள் எல்லாம் தண்ணீரில் மிதந்துகிட்டு போகுது… இதுவரைக்கும் எத்தனையோ மழை வந்திருக்கிறது. ஆனால் எந்த காலத்திலும் கார் மிகுந்த காட்சியை தொலைக்காட்சி பார்த்தது கிடையாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.