ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெற கூடும். நேர்மையாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தால் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் இருக்கும். புது புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும்.

தைரியமான செயல்பாடுகள் மட்டுமே வெற்றியைக் கொடுக்கும். எந்த செயலிலும் சிந்திக்காமல் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட வேண்டாம். பொறுமையாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெற வேண்டும். இனிமையாக பேசி காரியங்களை சாதிக்க முடியும். பெண்கள் இன்று முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக பேசுங்கள்.

ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். குடும்ப கஷ்டத்தையும் யாரிடமும் பகிர வேண்டாம். இன்று மாணவர்கள் தைரியமாக எதிலும் ஈடுபடுவீர்கள். கல்வியிலும் விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1, 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்