
பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டிச.23ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு டிச.23ல் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தேதியில் திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.