
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 2009இல் இந்தியா உள்ளிட்ட உலகத்தின் அனைத்து நாடுகளும் சேர்ந்து…. ஏறக்குறைய வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து…. முள்ளிவாய்க்காலை எப்படி சிதைத்தது, ஈவு இரக்கமில்லாமல் எப்படி அழித்தது என்பதும்… ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேரும் மொத்தமாக…. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் உட்பட மூன்றை லட்சம் தமிழ் உயிர்கள் அழிச்சு முடிச்சு இருக்கு. இந்த உலகம் வேடிக்கை பாத்துட்டு இருக்கு…
ஆக மூன்றாம் கட்டமாக… தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன், இப்போ துவாரகா மூன்றாம் கட்டமாக…. அவர் அகிம்சை வழி, இவரு ஆயுத வழி… ஆனால் எங்கள் வீட்டுப்பிள்ளை அரசியல் வழி என்று சொன்னார். இதை தமிழினம் கொண்டாடனும்…. தமிழினம் வரவேற்கணும்…. எல்லாத்துக்கும் மேலாக, இந்தியா.. இந்தியா…. இந்தியா துவாரகா அவர்களுடைய வருகையை வரவேற்கணும்… இது வந்து காலம் காலமாக இங்கே சொல்லப்பட்டு கொண்டிருக்கிற ஒரு விடயம்.
ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு….. கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க…. நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது….. இதனால் இந்தியாவுக்கு பேராபது…. இன்னைக்கு பங்களாதேஷில் வந்துட்டான்…. பாகிஸ்தான்ல வந்துட்டான்…. அருணாச்சல பிரதேசத்தில் பாதி புடிச்சுட்டாங்க என தெரிவித்தார்.