
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்….. இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை பெருமிதத்தோடு கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆகவே இப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், ஆன்மீகத்தை தனது இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். இந்துக்களின் ஓட்டு ஒன்று கூட தங்கள் பக்கம் வராது என்ற ஒரு நம்பிக்கை இழந்துவிட்ட காரணத்தால்…
தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் கேட்டால் அதற்கு உண்டான விளக்கமும் தவறு நடந்திருந்தால்… அதன் மீது நடவடிக்கை எடுக்கவும். இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் எல்லா காலங்களிலும் தயாராக இருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் பதிவிட கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.