திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு ஆளுநர் செயல்படனும்.. இன்னும் வெளிப்படையாக சொன்னால்,  இந்திய அரசியலமைப்பு சட்டம்….  வரைவு அரசியலமைப்பு ( Draft constitution) 91இல் என்ன சொல்லுது அப்படின்னா….  ஒரு கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய அரசு….  ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால்,  ஆறு வார காலத்தில் ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லுது.

மாண்புமிகு மறைந்த சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள ஆறு வாரம் என்பது மிக அதிகம். ஆகவே ஆறு வாரம் அவர்களுக்கு டைம் தேவையில்லை…  அவங்களுக்கு எவ்வளவு வேகமா கொடுக்க வேண்டுமோ,  அவ்வளவு வேகமாக கொடுக்கணும் இதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம் வரைவு அரசியலமைப்பு ( Draft constitution) 91இல்  இருக்கு.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் நடக்கணும். அதுவும் மிக உயர்ந்த பதவியில் இருக்கின்ற நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள், நிச்சயமாக அதை கடைபிடிக்க வேண்டும்….  அவர் என்ன சொல்றாரு?  இந்தியா செக்யூலர் நாடு… அதாவது மதசார்பற்ற நாடு. ஆனால் நம்முடைய மாண்புமிகு ஆளுநர் பல இடங்களில் சொல்றாரு இது மதசார்புள்ள நாடு அப்படின்னு சொல்றாரு என தெரிவித்தார்.