திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநாடு சேலம் மாவட்டத்தில் நடக்கலாம்…  இங்க இருக்கிற கௌதம சிகாமணி சொன்னது போல…..  அவருடைய தொகுதியில் நடக்கிற நிகழ்ச்சி….  ஆத்தூர் பக்கத்துல….  அதனால மிகப்பெரிய கூட்டத்தை இங்கே திரட்டி காட்ட வேண்டும்.

அது நம்முடைய கடமையாக,  பொறுப்பாக நீங்கள் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு நான் கேட்டுக் கொள்கின்றேன்… அதுக்கு தான் கே.என் நேரு அங்கேயே முழுமையாக அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்…

இளைஞரணி  செயலாளர் உதயா ஏற்பாடு செய்திருக்கிற இந்த மாநாடு,  தலைவர் தளபதி அவர்களும்  மிகச் சிறப்பாக இளைஞரணியில் இருந்து  எப்படி செயல்பட்டாரோ, அதை விட  பன்மடங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவர்தான் நம்முடைய உதயநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைக்கு, அவர் தமிழக முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். எல்லா மாவட்டங்களுக்கும் சென்று, இளைஞர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அந்த உணர்வோடு, நாமும் நம்முடைய மாவட்டத்திலே இந்த பணிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.