செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திரு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை  ஹீரோவாக காட்டி அவர்களை கொண்டாடுவது எங்களால் எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.என்னுடைய ட்விட்டரில் நான் அதை தெளிவாக போட்டு இருக்கிறேன்…  இதை காலம் காலமாக நான் சொல்லிக் கொண்டு தான் வருகிறேன்.

இதே மனநிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கடை கோடி தொண்டனும் இருக்கிறான்….  ராஜீவ் காந்தியை மட்டும் அல்ல,  ராஜீவ் காந்தியோடு 16,  17 தமிழர்களின் கொன்றவர்களை நாங்கள் எந்த காலத்திலும் மன்னிப்பதற்கு தயாராக இல்லை.. அவர்கள்  எங்களை பொறுத்தவரையில் கொலை குற்றவாளிகள் தான். அவர்கள் கூறுவது எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது…

அது நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன்….  நாம் பாலஸ்தீன மக்களோடு நாம் எப்படி ஒன்றாக நிற்கிறோமோ….. அப்படி ஒன்றாக நிற்கும் பொழுது ஹமாஸை நாம் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது…  அதேபோலத்தான் ஈழத் தமிழர்கள்…. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கும் போது….

அங்கு LTTE -க்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே கிடையாது….  எந்த காலகட்டத்திலும் ராஜீவ் காந்தி கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை எங்களால் மன்னிக்கவே முடியாது….  ராகுல் காந்தி மன்னித்து இருக்கிறார் என என்றைக்குமே சொன்னதில்லை….. ராகுல் காந்தி மன்னித்தது எல்லாம் சொல்லல….  இன்னைக்கு வரைக்கும் நான் சொல்றேன்….  நான் சராசரி காங்கிரஸ்காரனாக சொல்கிறேன்….  ராஜீவ் காந்தியோடு,  மற்றவர்களையும் கொன்றவர்களை எங்களால் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாது..

சட்ட ரீதியாக அவர்கள் குற்றவாளிகள் என்று நிறுவப்பட்டிருக்கிறார்கள்….  சட்டத்திலே நிவாரணம் கொடுப்பதற்கு இடம் இருந்தால்,  அவங்க கொடுத்துட்டு போகட்டும். ஆனால் குற்றவாளிகள்… குற்றவாளிகள் தான்…  கொலை செய்தது ஒரு மிகப்பெரிய ஒரு கொடூரமான செயல்…  அதை வன்மையாக கண்டிக்கிறேன்…  அந்த செயலுக்கு சம்பந்தப்பட்டவர்களை எந்த காலத்திலும் நான் மன்னிக்க தயாராக இல்லை…..  என்னுடன் தான் அடிமட்ட காங்கிரஸ் தொண்டனும் இதே மனநிலையில் தான் இருக்கிறான்  என்பதில்லை எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது என தெரிவித்தார்.