
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இங்க யார் வணக்கத்திற்குரியவர்…. யார் வழிபாட்டு குறியவர் என்பதை அண்ணாவில் தொடங்கி, கலைஞர் வழியில்…. இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து….. சேகர்பாபு அவர்களுக்கு புரிந்ததால் தான் முதல் நாள் சனாதன எதிர்ப்பு மாநாடு….. அடுத்த நாள் கோவில் கும்பாபிஷேகம், அதற்கும் இதற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை அது வேறு இது வேறு…..
கலைஞரின் நூற்றாண்டில் ஏன் ஹிந்து சமய அறநிலையத்துறை பேசப்படுகிறது என்றால் ? கலைஞர் உருவாக்கிய பல நூறு விஷயங்களில் இந்த தெளிவை சேகர்பாபு அவர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது கலைஞர் தான் என்பதால் கலைஞர் நூற்றாண்டில் சேகர்பாபு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையை பேசுகிறோம். இதைப் போன்ற தொண்டர்களையும், உடன்பிறப்புகளையும் உருவாக்கி வைத்திருப்பதால் தான்..
முதலில் ஒரு மனிதனைப் பற்றி 100 கூட்டம் பேச முடியுதுன்னா…. எவ்வளவு சாதனை செஞ்சி இருப்பான், நினைச்சு பாருங்க…. கூட்டம் நடத்த முடியுமா ? இரண்டாவது கூட்டம் நடத்த முடியாது, சொன்னதே சொல்லிட்டு இருக்கணும்…. அண்ணன் சேகர்பாபு மட்டும் 100 கூட்டம்.. இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் கூட்டம்… அப்போ ஒவ்வொரு துறையிலும்….. தான் தொட்ட இடத்தில் எல்லாம் மிகச்சிறந்த காரியங்களை முனைப்போடு பண்ணுவதால் தான் கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். கலைஞரை பேசி, கொண்டாடுவதன் மூலமாக நாம் நம்மை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் பாத்தியா…. ஆணும், பெண்ணும் சமமாக இருக்கனும் என்று நினைக்கிறேன் பார்த்தியா… இது எங்கிருந்து வந்தது தெரியுமா ? எங்க தாத்தா கிட்ட இருந்து வந்துச்சு… நாம் அவரையா கொண்டாடுறோம்…. அவரின் மூலமாக நம்மை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரின் மூலமாக நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்…. இன்னைக்கு இந்தியாவிலேயே திராவிட மாடல் அரசாங்கம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பதற்கு காரணம்….. நாம் அவரை கொண்டாடுவதன் மூலமாக நம்மை கொண்டாடுவது என தெரிவித்தார்.